×

கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: நினைவுகளை கூறி ஆனந்த கண்ணீர்

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த 60 மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது படித்த மாணவர்கள், வருவாய்த்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை வரவேற்று, குரு பூஜை நடத்தினர். ஆசிரியர்களை கவுரவித்து சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் அவினாசி பங்கேற்று, பழைய மாணவர்களை வாழ்த்தி பேசியதுடன் தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். சில மாணவர்கள் பழைய நினைவுகளை கூறியபோது ஆனந்த கண்ணீர் வடித்தனர். தாங்கள் படித்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு நிதி உதவி வழங்குவதாக பழைய மாணவர்கள் தற்போதைய தலைமை ஆசிரியர் முகுந்தனிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் செய்திருந்தனர்.


Tags : KG Kandikai ,Government ,School , Alumni meeting at KG Kandikai Government School: Tears of joy telling memories
× RELATED கே.ஜி.கண்டிகையில் ஆபத்தான நிலையில்...